340 விரைவு, சொகுசு பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கம் : ஆண் பயணியருக்கு கட்டணம் குறைந்தது
சென்னை : மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் இயக்கப்படும், 340 விரைவு, சொகுசு புறநகர் அரசு பஸ்கள், சாதாரண கட்டணத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதால், ஆண் பயணியருக்கு, 15 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சாதாரண கட்டண பஸ்களில், மகளிர் இலவச பயண திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், 'வெற்றி பயணம்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மாநகர் மற்றும் நகர் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதனால், சென்னையில் சொகுசு மாநகர பஸ்களிலும், மாவட்டங்களில் புறநகர் சாதாரண கட்டண பஸ்களிலும், பெண் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த வகை பஸ்களை, பயணியர் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'வெற்றி பயணம்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளதுடன், 'டிஜிட்டல்' பலகையும் அமைக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் குறைவு எப்படி?
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர விரைவு, சொகுசு பஸ்களும், புறநகர் சாதாரண பஸ்கள் மற்றும், 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பஸ்கள் என, 12 ஆயிரத்து 695 பஸ்களில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதில், மாவட்டங்கள், முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படும் 2,390 புறநகர் சாதாரண கட்டண பஸ்களும் அடங்கும். இந்த விரிவாக்க திட்டத்துக்கு முன், 2,050 பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது, 340 விரைவு, சொகு புறநகர் பஸ்கள், சாதாரண கட்டணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண் பயணியருக்கு துாரத்துக்கு ஏற்றார் போல், 10 ரூபாய் முதல் 15 வரை கட்டணம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் சாதாரண பேருந்து உரிமம் பெற்று எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி முறைகேடு நடக்கிறது.இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்.
அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கும் நீலகிரி மலை மாவட்டத்தில் பேருந்து கோளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் வெற்றிப்பயணத்திட்டம் மக்களை எட்டாது.
என்னதான் மகளிர்களுக்கு இலவச கட்டணம் பஸ் விட்டாலும், இந்த பெண்கள் அந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தாமல், ஒரு கொத்தமல்லி கட்டு வாங்க, கொரட்டூரிலிருந்து, கோயம்பேடு மார்க்கெட் செல்ல அந்த இலவச பஸ்ஸில் பயணம் செய்வது சரியல்ல...மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்