எல் நினோவால் வெப்பநிலை அதிகரிக்கும்; வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

- நமது சிறப்பு நிருபர் -

பசிபிக் பெருங்கடலில், மத்திய மற்றும் கிழக்கு பகுதியில், கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பது, 'எல் நினோ' என்று கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சில பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்.

'' 1950ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட வானிலை மாற்றங்களில், இந்த ஆண்டு வானிலை மாற்றம் கடுமையாக இருக்கக்கூடும். மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எல் நினோ மேலும் தீவிரப்படுத்தும்,'' என ஐநாவின் வானிலை மற்றும் காலநிலை அமைப்பான உலக வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், பசுபிங் பெருங்கடல் தன்னுள் சிக்கிய பெரும் அளவிலான வெப்பத்தை வெளியிடுவதால் பூமியின் ஒருபெரும்பகுதி வழக்கத்திற்கு மாறாக வெப்பமான சூழலை அனுபவிக்கும். எல்நினோ முன்பு எப்போதும் இல்லாத நிலையை நோக்கி செல்கிறது என வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரியான் மாவே என்ற வானிலை நிபுணர், பூமியின் காலநிலை குறித் வகைபடத்தை வெளியிட்டு உள்ளார். அதில், பூமி முழுவதும் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டது.

'' அமெரிக்காவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் புவி வெப்பமயமாதல் அதிகரித்து இருப்பதால், எல்நினோ குளிர்காலத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். 2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும்,'' எனவும் கூறினார்.

ஸீக் ஹவுஸ்பாதர் என்ற வானிலை விஞ்ஞானி வெளியிட்ட அறிக்கையில்,'' இந்த ஆண்டின் எல் நினோ இதுவரை கண்டிராத உச்சத்தை நோக்கி உயர்கிறது,'' எனக்கூறியுள்ளார்.

எல் நினோ தொடர்பாக தற்போது உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,'' 2026ம் ஆண்டின் இறுதியில் உலகின் பெரும்பகுதி சராசரிக்கும் அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுவதற்கான மிக அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.

எல்நினோ நிகழ்வின் மையமாக விளங்கும் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசுபிக் பகுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடல் மேற்பரப்பில் இயல்டை விட சாதனை அளவாக 6.7 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கூறியுள்ளது.

Advertisement