பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: சவுதி செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து

புதுடில்லி: சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அபாவில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடரும் என பயங்கரவாதிகள் எச்சரித்தனர்.

ரியாத் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,'' பயணிகள் வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட விமானங்களின் நிறுவனங்களை தொடர்பு கொள்ளும்படி,'' அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 10 வரை ரியாத் செல்லாது என அறிவித்துள்ளன.

அங்க நிலவும் சூழ்நிலை காரணமாகவும் ரியாத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் இயக்கப்படாது. பாதிக்கப்படும் பயணிகளுக்கு முழுக்கட்டணமும் திருப்பி செலுத்தப்படும்,'' என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Advertisement