அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

விழுப்புரம் நகர பகுதியில் உள்ள நகை கடையில் சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திர பிரசாத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவர் நகை கடைகளை ஆய்வு செய்த போது, கை வள்ளியர் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில், அதன் உரிமையாளர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் காரை வழிமறித்தார்.

இதையடுத்து, அலுவலர் ராஜேந்திர பிரசாத், விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தார். அவர்கள் அந்த நகை செய்யும் கடையை ஆய்வு செய்தனர். அங்கு பணியிலிருந்த 15 வயது, 13 வயது, 17 வயதுள்ள மூன்று சிறுவர்களை மீட்டனர். அலுவலர் ராஜேந்திர பிரசாத் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார், நேற்று முன்தினம் காரை மறித்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கடை உரிமையாளர் நிஜாம்,32; மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement