இந்தியாவின் பாஸ் அம்பானியா: எலான் மஸ்க் கேள்வி
வாஷிங்டன்: செயற்கைக்கோள் வாயிலாக இணையவழி சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அந்நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.
நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், '' இந்தியாவில் தனது ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைக்க சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்க்கை முடக்குகின்றனர். அவர்கள் யார் என நீங்கள் யூகிக்கலாம். அது இந்திய மக்களுக்கு எதிரானது,'' என பதிவிட்டு இருந்தார்.
ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு'' இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கான ஒழுங்குமுறை சட்டம் பாரபட்சமின்றியும், நியாயமான முறையிலும் நடைமுறையில் உள்ளது. எலான்மஸ்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது,'' எனத் தெரிவித்து இருந்தது.
இது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
அந்த பதிவு ஒன்றுக்கு எலான்மஸ்க் வெளியிட்ட பதில் ஒன்றில்,'' ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 165 நாடுகள் லைசென்ஸ் வழங்கி உள்ளன. இந்திய அரசின் ஒவ்வொரு சட்டம் மற்றும் வழிமுறைகளை ஐந்து ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். ஆனால், இன்னும் லைசென்ஸ் வழங்கப்படாதது ஏன்? இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா,'' என்று கூறியுள்ளார்.
அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
@block_Y@ராகுல் வெளியிட்ட பதிவு ஒன்றில்
'எலான் மஸ்க்கை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். மற்றொரு நபரை கண்டுபிடிக்கும் வரை காத்திருங்கள்,'' எனக்கூறியுள்ளார்.
block_Y
உன் ஸ்டார்லிங்க் இல்லாமல் எங்க நாட்டில் எல்லாமே முடங்கி விட்டதா என்ன, போடா சரி தான்.
இங்கு அம்பானி எத்தனையோ ஏழை ஜோடி களுக்கு தன் செலவில் இலவச மாக திருமணம் செய்து வைத்துள்ளார்/
வைத்துக் கொண்டிருக்கிறார்.
திருப்பதி மலைக்கு குறைந்த நேரத்தில் படி ஏற பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்.
நீ என்ன செய்வாய், இங்கு எங்கள் பணத்தை சுரண்டிக் கொண்டு போய் உன் நாட்டில் சேர்ப்பாய்.
இன்னொன்று,,இங்கு நடப்பது இத்தாலி மாபியா ஆட்சியும் இல்லை.
ஆமாண்டா..... அம்பானி தான் பாஸ்..... இப்ப என்னா அதுக்கு?
இந்தியாவில் இந்தியன்தான்டா பாஸ் ஆக இருக்க முடியும்.. நீ எதுக்கு இங்க வருகிறாய்?
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி குடுத்ததாக பீட்ரிக்கொள்ளும் கட்சி மீண்டும் அடுத்த வெள்ளையனின் அதிக்க அடிமையாக இருக்க எதையும் செய்யும் நிலைக்கு சென்றுள்ளது
ஆமாம்.. நீங்க என்ன அமெரிக்காவின் பாசா ?
நீ என்ன உலக நாடுகள்உன் சொத்தா இது இந்தியா ... மூடி கொண்டு இரு
ஒ. அப்ப அமெரிக்காவின் பாஸ் மஸ்க் போல. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆப்ரிக்கா அரபு நாடுகளில் எல்லாம் முதலீடு முடிஞ்சது போல. இந்தியாவில் இவர் முதலீடு செய்ய தேவையில்லை. நம் நாட்டில் உள்ள பணக்காரர்கள் முதலீடு செய்யட்டும். நம் பணத்தில் இவர் லாபம் சம்பாதிக்க வேண்டாம். ஒரு இந்தியரே லாபம் சம்பாதிக்கட்டும்.இவர் இந்தியாவை உடைக்க சதி செய்கிறார்.
ஏன் பாஸ் அமெரிக்கரோடுல பி ஒய் டி, எம் ஜி, கீலி, ஜிடபுள்யு எம் கார்களை காணோம்.
அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கே பாஸ் என்று எலனுக்கு நினைப்பு. அதுதான் அடிப்படை பிரச்சினை. இந்தியாவால் ஸ்டார் லிங்க் போல ஆயிரம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி அவரைப்போலவே தொழில் செய்ய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
srarlink பங்களாதேஷ் அனுமதி கொடுத்து இருக்காங்க ஆனால் அங்க வெறும் 5000 பேர் தான் உபயோக படுத்துறங்க. ரெசிவேர் 20000 ரூபாய் மற்றும் மாதம் 8000 ரூபாய்.. சீனாவில் அனுமதி இல்லைமேலும்
-
ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்
-
அரசியல், தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் விஜய்
-
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; ஸ்டாலின் குமுறல்
-
இடைத்தேர்தல் வெற்றி; அமைச்சர்களுடன் தனது பாணியில் கொண்டாடிய முதல்வர் விஜய்
-
போர் விமானத்தை இயக்கிய முதல் ராணி தாய்லாந்தின் 'பைலட் குயின்'
-
அமெரிக்காவின் செயலை ஏற்க முடியாது: வெளியுறவுத்துறை அமைச்சகம் காட்டம்