ஆட்டோவில் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த டிரைவர்
திண்டிவனம்: ஆட்டோவில் தவறவிட்ட 5,000 ரூபாயை முதியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.
திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 44; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் கடந்த 6ம் தேதி செண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன், 69; என்பவர் தனது மனைவியுடன், திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
ஆட்டோவில் தான் கொண்டு வந்த ஒரு 5,000 ரூபாய், மொபைல் போன், பாங்க் பாஸ் புக் பையை விட்டுச் சென்றார்.
அவர்கள் சென்றதும், ஆட்டோவில் இருந்த பையை டிரைவர் கிருஷ்ணமூர்த்தி எடுத்து திண்டிவனம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றார்.
அப்போது அங்கு முதியவர் தனது மனைவியுடன் அங்கு நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, அவர் விட்டுச் சென்ற 5,000 ரூபாய், மொபைல் போன், பேங்க் பாஸ் புக் ஆகியவற்றை டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி ஆகியோர் மூலம் முதியவரிடம் கொடுத்தார்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்திக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
மேலும்
-
யு.பி.ஐ., கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க அரசு பரிசீலனை: பண்டிகை கால பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை
-
கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்வு: பண்டிகை நேரத்தில் நெருக்கடி
-
தாம்பரம், எழும்பூரிலிருந்து டில்லிக்கு சிறப்பு ரயில்கள்
-
திடக்கழிவு மேலாண்மை சவால் தீர்வு காண 'கிளியர்' திட்டம்
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
-
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலர்: பா.ம.க., அதிரடி