யு.பி.ஐ., கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க அரசு பரிசீலனை: பண்டிகை கால பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை
புதுடில்லி:யு.பி.ஐ., பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
யு.பி.ஐ.,யை செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இதை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வியாபார பரிவர்த்தனைகளுக்கு, 0.4 சதவீத கட்டணத்தை வணிகர்களிடம் வசூலிக்க, கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த புதிய கட்டண முறை, வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனமான என்.பி.சி.ஐ., அறிவித்தது. இப்புதிய நடைமுறையின்படி நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது; வணிகர்கள் மட்டுமே அதை ஏற்க வேண்டும்.இருப்பினும், இக்கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது வணிகர்கள் சுமத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், பண்டிகை காலம் துவங்கியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வர உள்ளன. மேலும், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையும் அடுத்தடுத்து வர உள்ளதால், பண்டிகை கால விற்பனையை வணிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது நாட்டில், 50 கோடிக்கும் அதிகமானோர் யு.பி.ஐ., சேவையை பயன்படுத்தி வருகின்றனர். புதிய யு.பி.ஐ., கட்டண முறையால், பண்டிகை கால விற்பனை பாதிக்கப்படலாம் என பலரும் கருதுகின்றனர். எனவே, எம்.டி.ஆர்., என்ற இக்கட்டண நடைமுறையை, சில மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புதிய கட்டண முறைக்கு மாற, வர்த்தகர்களுக்கு இந்த அவகாசம் உதவும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@block_B@
யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு தொடர்ந்து இலவசமாக வழங்க வேண்டும் என்றும், ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''வாடிக்கையாளர்கள் யு.பி.ஐ., பயன்படுத்தும் போது ரொக்கத்தை கையாளுதல் மற்றும் ஏ.டி.எம்., இயக்க செலவுகள் வங்கிகளுக்கு மிச்சமாகின்றன. மேலும், 55 கோடி இந்தியர்களின் நுகர்வு தரவுகள் கிடைப்பதன் வாயிலாக கடன், காப்பீடு விற்பனை வாய்ப்புகளும் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன. எனவே, வங்கிகளும், சேவை நிறுவனங்களுமே, யு.பி.ஐ., பராமரிப்பு செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.block_B
நிதி ஆப் க்கள் செல்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மற்ற பரிவர்த்தனை தரவுகளையும் சேகரித்து அவற்றுக்கு ஏற்றார் போல மார்க்கெட்டிங் செய்கின்றன.
ஆனால் UPI ஐ செயல்படுத்தும் NPCI ( அரசுசார்பற்ற)க்கு அப்படிப்பட்ட வருமானம் ஏதுமில்லை . UPI யால் ரூபாய்தாள்களை அச்சடிக்கும் வேலை, ஏடிஎம் நிர்வாக செலவுகள், செக் பரிவர்த்தனை குறைந்துவிட்டன. இவற்றின் மூலம் வங்கிகளுக்கு மிச்சமாகும்
Sundaram Sir, please use different words. Kindly avoid using terms like “Mamo Namaha” in a way that may demean or disrespect Hindu beliefs.
நல்ல திட்டங்களை ஒருபோதும் ஒத்திவைக்க கூடாது. மக்கள் விரும்பித்தான் இந்த சேவையை கட்டுகிறார்கள். காரணம் இலவசமா கிடைக்கும் எதுவும் நிலைக்காது என்று மக்களுக்கு தெரியும்.
யு பி ஐ கட்டணம் உயர்த்துவதாக அறிவித்த போது அதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழும்பிபோது, இந்த கட்டண உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமே கிடையாதுஎன்றார்கள். இப்போது கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வருகின்றன இதுதான் இந்திய நமோ நமஹ :
கட்டணம் வசூலிக்கும் அதிகாரத்தை அரசு விதிகள் படி அனுமதிக்கிறது. இது அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதை மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது... கொஞ்சம் மசாலா வேண்டும்....