ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலர்: பா.ம.க., அதிரடி

சென்னை: சென்னையில் ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்ட செயலர், மாவட்ட தலைவரை, பா.ம.க., தலைவர் அன்புமணி நியமித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவில், வடமாவட்டங்களில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, பா.ம.க.,வின் பங்கும் அதிகம் இருந்தது.

இந்த சூழலில், பா.ம.க.,வை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் அன்புமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஓட்டுச்சாவடி அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்ய, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தற்போது, சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர், ஒரு மாவட்ட தலைவர்கள், பா.ம.க.,வில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலர், மாவட்ட தலைவர்களை அன்புமணி நியமித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், புதிய நிர்வாகிகளை நேற்று அவர் அறிவித்தார்.

Advertisement