தாம்பரம், எழும்பூரிலிருந்து டில்லிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தாம்பரம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து, டில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

* தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சென்றடையும்

* எழும்பூரில் இருந்து நாளை இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு, ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement