பைக்கில் சென்ற வாலிபர் தடுப்பில் மோதி காயம்

திருத்தணி: திருத்தணி அருகே, பைக்கில் சென்ற வாலிபர், நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி படுகாயம் அடைந்தார்.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 24. இவர், நேற்று வேலை நிமித்தமாக, திருத்தணி பஜாருக்கு சென்று, பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் புதிய புறவழி சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த தற்காலிக தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த சந்தோஷை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement