குறைகிறது புற்றுநோய் மருந்துகளின் விலை
புதுடில்லி: புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில், அனைத்து வகையான பட் டியலிடப்படாத அவ்வகை மருந்துகளின் மீதான வர்த்தக லாப வரம்பை, அதிகபட்ச சில்லரை விலையில், 30 சதவீதமாக கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை, 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, சில்லரை விற்பனையாளர்களுக்கு 2,700 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் அதிகபட்ச சில்லரை விலை 27 ஆயிரம் ரூபாய் என விற்கப்படுவதைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியது.
அத்துடன், அனைத்து மருந்துகளுக்கும், 16 சதவீத லாப வரம்பு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், புற்று நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதிகபட்ச சில் லரை விலையில், 30 சதவீதம் வரை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக, 35 காப்புரிமை பெற்ற மருந்துகள் உட்பட மொத்தம், 110 புற்றுநோய் மருந்துகள் இந்த விலை குறைப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் உள்நாட்டு மருந்துகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், 'பிராண்டட்' மற்றும் 'ஜெனரிக்' மருந்துகள் என அனைத்து வகையான புற்றுநோய் மருந்துகளுக்கும் இது பொருந்தும்.
மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் தலைமையிலான குழு இதற்கான மருந்துகளின் பட்டியலை இறுதி செய்து வருகிறது.
இந்த புதிய விலை குறைப்பு, இந்த மாத இறுதிக்குள் நாடு முழுதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால், புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்