காசநோய் இல்லாத 2,390 பஞ்சாயத்துகள்

சென்னை: தமிழகத்தில் காசநோய் இல்லாத, 2,390 கிராம பஞ்சாயத்துகளுக்கு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

டில்லியில், தேசிய அளவிலான காசநோய் இல்லாத ஜோஷ் அணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக அணியை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அத்துடன், காசநோய் குறித்த கள ஆய்வு கையேட்டை வெளியிட்டார்.

இதற்கிடையே தமிழகத்தில், 2,390 கிராம பஞ்சாயத்துகள், தேசிய அளவில் காசநோய் இல்லாத பஞ்சாயத்துகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement