வண்டலுார் – வாலாஜாபாத் சாலையில்: வண்டலுார் – வாலாஜாபாத் சாலையில்
வண்டலுார்: வண்டலுார் –- வாலாஜாபாத் சாலையில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளில் இருந்து சிதறி கிடக்கும் மணலால், அ வ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
வண்டலுார் –- வாலாஜாபாத் இடையிலான, 33 கி.மீ., துார நெடுஞ்சாலையின் சுற்று பகுதியில், ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைந்துள்ளன.
தவிர, ‘நிசான், அப்பல்லோ டயர்ஸ், ஆல்ஸ்டோம், இன்பெக் இந்தியா, ஹூண்டாய்’ உட்பட பல முன்னணி நிறுவனங்களும், 1,000க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
அதே பகுதியில், புதிய நிறுவனங்கள் உருவாக்கத்திற்காகவும் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
தவிர, சுற்று பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணியும் நடந்து வருகிறது.
இதற்காக மண் மற்றும் ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் லாரிகள், விதிகளை மீறி தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன. இதனால், லாரிகளில் இருந்து சிதறும் மண் துகள்கள், சாலை நெடுகிலும் பரவிகிடக்கின்றன.
இதனால், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நான்கு வழி சாலையாக இருந்த வண்டலுார் –- வாலாஜாபாத் சாலை, 2019ல், முதற்கட்டமாக வண்டலுார் – ஒரகடம் வரை, 17 கி.மீ., துாரத்திற்கு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி சாலையாக விரிவாக்கம்செய்யப்பட்டது.
பின், இரண்டாம் கட்டமாக ஒரகடம் – வாலாஜாபாத் வரை, 16 கி.மீ., துாரத்திற்கு, 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கு, 3,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
இதில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், செங்கல், மணல், ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளாக உள்ளன. இந்த லாரிகளிலிருந்து சிதறும் மணல், 15 அடி அகலத்தில் பரவி கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையில் சிதறி கிடக்கும் மணலை அகற்ற, நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளித்தால் பெயரளவிற்கு, மட்டுமே பணி நடக்கிறது. எனவே, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை