துாய சக்தியின் செயல்பாடு தேர்தல் முடிவில் தெரியும்
திருப்பூர்: “துாய சக்தி எனக் கூறுபவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது, இடைத்தேர்தல் முடிவில் தெரியவரும்,” என, பா.ஜ., ஆந்திர மாநில இணை பொறுப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் கூறியதாவது:
முதல்வர் விஜய், கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாத கால ஆட்சி ஏற்படுத்தியுள்ள நிலை இதுதான். மின்வெட்டால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உள்ளது. சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத்தர தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் விகிதம் குறைந்துள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளன. இது நீண்ட காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ‘துாய சக்தி, மாற்றத்துக்கான துாதர்கள் நாங்கள் தான்’ என பேசும் த.வெ.க.,வின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதற்கான பதில், இடைத்தேர்தல் முடிவில் தெரியவரும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்