வன உயிரினங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
சென்னை: சென்னை, கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வன உயிரின வார நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், வன உயிரினங்களுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை, அமைச்சர் ரஞ்சித்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின், அமைச்சர் பேசுகையில், ‘‘முதல்வரின் வழிகாட்டுதலில் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். தமிழகத்தில் யானைகள் மற்றும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது,’’ என்றார். மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ‘நாகம்’ செயலி வாயிலாக பதிவு செய்த பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களுக்கு உபகரண தொகுப்புகளையும் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement