கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவருக்கு ‘குண்டாஸ்’
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டையில், கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய பெண் உட்பட, 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி டாக்டர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கடந்த மாதம், கர்ப்பிணியான, பேவநத்தம் துணை சுகாதார நிலைய செவிலியர் கிருத்திகா மற்றும் 4 கர்ப்பிணிகளை அழைத்து கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, போச்சம்பள்ளியை சேர்ந்த எஸ்தர், 32, என்பவர் சட்டவிரோதமாக கருவில் இருக்கும், குழந்தை ஆணா, பெண்ணா, என கண்டறிந்து கூறுவது தெரிந்தது. கடந்த மாதம், 12ல், அவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ராயக்கோட்டையிலுள்ள கிருத்திகா என்பவருக்கு கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூற கேட்டனர். அதற்கு, 10,000 ரூபாய் தர எஸ்தர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் கிருத்திகா வீட்டிற்கு, அவரும், திருப்பூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி, 30 என்பவரும் காரில் வந்தனர். அதிகாரிகள் விசாரணையில், எஸ்தர் மருத்துவம் படிக்காமலேயே கரு பாலினத்தை கண்டறிவது தெரிந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து ஸ்கேன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.
கைதான இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., அனிதா பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தவிட்டார். அதன்படி, எஸ்தர், குருமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகலை சிறையிலுள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர்.
மேலும்
-
பைனல்(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பட விளக்கத்திலும் மாற்றிக்கொள்ளவும்) ரேஷன் விற்பனையாளர் மூளைச்சாவு இரு சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்
-
தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை
-
மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
-
தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகர் கோவை
-
துாய்மை பணி டெண்டரில் 32 சதவீதம் குறைவு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க தடையாய் தி.மு.க., மேயர்
-
தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்