தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகர் கோவை
தென்னிந்திய ஐ.டி துறையின் அடுத்த தலைநகராக கோவை உருவாக வாய்ப்பு அமைந்துள்ளது.
கோவை தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அடையாளத்துடன் உற்பத்தித்துறையில் முத்திரை பதித்தது. ஜவுளி, கிரைண்டர், பம்ப் மோட்டார், பவுண்டரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் என ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவையின் எதிர்கால அடையாளமாக இருக்க போவது ஐ.டி நிறுவனங்கள் தான். பெங்களூர், சென்னை, ஐதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் ஐ.டி துறை பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டது. அந்த நகரங்களில் செலவும் அதிகமாக உள்ளது. ஐ.டி நிறுவனங்களின் பார்வை இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ளது. அதில் பல வெளிநாட்டு நிறுவனங்களின் முதல் விருப்பமாக கோவை உள்ளது.
கோவையில் 1,200க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட ஐ.டி. ஸ்டார்ட் அப்கள் இயங்குகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடிக்கு வர்த்தகமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோவை ஐ.டி துறை 10 சதவீதம் வளர்ச்சியை எட்டி வருகிறது. ஜோஹோ, இன்போசிஸ், டி.சி.எஸ், சி.டி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் புதிய நிறுவனங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். புதிய ஐ.டி வளாகம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்பே, அனைத்து தளங்களிலும் அலுவலகங்கள் முன்பதிவாகிவிடுகிறது. அந்தளவுக்கு கோவையில் ஐ.டி நிறுவனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோயம்புத்தூர் நெக்ஸ்ட் அமைப்பின் நிர்வாகி ஆகாஷ் கூறியதாவது:
தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகராக கோவை உருவாகும். 50க்கும் மேற்பட்ட புதிய ஐ.டி வளாகங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. எல் அண்ட் டி பைபாஸில் 4 லட்சம் சதுரடிக்கு 20 மாடி ஐ.டி வளாகம் அமையவுள்ளது. கே.பி.ஆர் குழுமம் 34 மாடியில் ஐ.டி வளாகம் கட்டுகின்றனர். காளப்பட்டி, சரவணம்பட்டி, நீலாம்பூர், ஒத்தக்கால் மண்டபம் பகுதிகளில் சிறியதாக நிறைய ஐ.டி நிறுவனங்கள் கட்டி வருகிறார்கள். கொச்சி, விசாகப்பட்டினம், மங்களூர் உள்ளிட்ட மற்ற இரண்டாம் கட்ட நகரங்களை விட கோவை ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. கோவையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய சிந்தனைகளுடன் இளைஞர்கள் வருகிறார்கள். பெரு நகரங்களை விட செலவும் குறைவாகவே உள்ளது.
தனியார் நிறுவனங்கள் வருமளவுக்கு அரசு அறிவித்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. கோவையில் டெக் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்தனர். ஏ.ஐ டெக் பார்க் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தனர். இரண்டுமே செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் திறந்து 16 ஆண்டுகளாகிவிட்டது. அதன் பிறகு பெரிய திட்டங்கள் வரவில்லை. கடந்தாண்டு விளாங்குறிச்சியில் எல்காட் விளாகம் திறந்தனர். அது மிகவும் சிறிய வளாகம். கோவைக்கு பல அரசு திட்டங்கள் தேவை. டைடல் பார்க் வளாகம் அருகே 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் ஐ.ஐ.டி மெட்ராஸின் ஆய்வு பூங்கா அமைக்க திட்டமிட்டனர். அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
போதிய இடவசதி இல்லாததால் பல நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளனர். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் மட்டுமே கோவை ஐ.டி துறை இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. அரசும் கவனம் செலுத்தினால் கோவை ஐ.டி துறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். புதிய ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு தடையாக உள்ளது. ரோடு, விமான நிலையம், மெட்ரோ, பாதாள சாக்கடை, தண்ணீர் போன்ற உள்கட்டமைப்பை பலப்படுத்தினால், கோவை ஐ.டி துறையில் புதிய உச்சத்தை எட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பைனல்(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பட விளக்கத்திலும் மாற்றிக்கொள்ளவும்) ரேஷன் விற்பனையாளர் மூளைச்சாவு இரு சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்
-
தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை
-
மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
-
துாய்மை பணி டெண்டரில் 32 சதவீதம் குறைவு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க தடையாய் தி.மு.க., மேயர்
-
கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவருக்கு ‘குண்டாஸ்’
-
தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்