பைனல்(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பட விளக்கத்திலும் மாற்றிக்கொள்ளவும்) ரேஷன் விற்பனையாளர் மூளைச்சாவு இரு சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்
சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி புதுாரை சேர்ந்த சேகர் மகன் ராம்ராஜ், 29. கருமந்துறை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். கடந்த, 5ல், ரேஷன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்கு மறுநாள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள், ராம்ராஜ் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழிகாட்டுதல்படி, ராம்ராஜ் உடலில் இருந்து, இரு சிறுநீரகங்கள், கல்லீரல், அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. தொடர்ந்து, ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை, மற்றொன்று கோவை அரசு மருத்துவமனை, கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
பின், ராம்ராஜ் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில், மருத்துவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் அன்புதுரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை
-
மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
-
தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகர் கோவை
-
துாய்மை பணி டெண்டரில் 32 சதவீதம் குறைவு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க தடையாய் தி.மு.க., மேயர்
-
கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவருக்கு ‘குண்டாஸ்’
-
தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்