மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் கமிஷனர் உத்தரவில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பருவமழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகளை தீவிரப்படுத்த கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.
மாநகர நல அலுவலர் முருகானந்த், சுகாதார அலுவலர்கள் அறிவுச்செல்வன், தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் சாய்பிரதீப் தலைமையிலான ஊழியர்கள் ஆர்.எம்.காலனி, நந்தவனம் ரோடு, 80 அடி ரோடு பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய்களில் துார்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.
மழைநீர் வடிகால் பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் குப்பையை கொட்டுவதை தவிர்த்து குப்பையை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும். டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்திக்கு மக்களின் செயல்பாடுகள் உறுதுணையாக இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம், சீல் வைக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
மேலும்
-
பைனல்(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பட விளக்கத்திலும் மாற்றிக்கொள்ளவும்) ரேஷன் விற்பனையாளர் மூளைச்சாவு இரு சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்
-
தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை
-
தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகர் கோவை
-
துாய்மை பணி டெண்டரில் 32 சதவீதம் குறைவு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க தடையாய் தி.மு.க., மேயர்
-
கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவருக்கு ‘குண்டாஸ்’
-
தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்