வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
நாமக்கல்,:பொது வினியோக திட்ட, பொதுமக்கள் குறை தீர் முகாம், நாமக்கல் மாவட்டத்தில், நாளை ( அக்., 10) 8 இடங்களில் நடக்கிறது.
நாமக்கல்
மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர்
நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு
மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை அளிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது வினியோக திட்டத்தின்
சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள
குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், பொது வினியோகத்திட்ட மக்கள்
குறைதீர் முகாம் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
நடக்கிறது.
நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம்,
கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய தாலுகா
அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற
உள்ளது.
எனவே, பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, பொது
வினியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து,
தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்