கொல்லிமலையில் தங்க மோதிரம் திட்டம் துவக்கம்

சேந்தமங்கலம்:கொல்லிமலை வட்டத்தில் அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை எம்.எல்.ஏ., சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

கொல்லிமலை ஒன்றியம் தேனுார்பட்டி, சோளக்காடு மற்றும் பவர்காடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு, தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தமிழரசன், கோபி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., சந்திரசேகர் சிறப்பாளராக பங்கேற்று, பச்சிளம் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம், 1 கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

Advertisement