புரட்டாசி மாத பிரதோஷ பூஜை

வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் பகுதியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement