ஆம்புலன்ஸில் பணிபுரிய வரும் 11ல் ஆள் எடுப்பு
சேலம்; தமிழகத்தில் காலியாக உள்ள, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகன டிரைவர், மருத்துவ உதவி-யாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வரும், 11 காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது.
டிரைவர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 24 முதல், 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்-கலாம். உயரம், 162.5 செ.மீ.,க்கு குறையாமல் இருப்பதோடு, 4 சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகளும், 'பேஜ்' வாகன உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்தவர்களும் தகுதி-யானவர்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு, 21,120 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும்.மருத்துவ உதவியாளர் பணிக்கு, 19 முதல், 30 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்-கலாம். அதற்கு பிளஸ் 2 வகுப்புக்கு பின் பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., இரு ஆண்டு படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லை எனில் லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்னி, பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோ டெக்னா-லஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோ-ருக்கு, 21,320 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், அசல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என, '108' அவசரகால ஆம்-புலன்ஸ் திட்ட மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்