புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வீசப்பட்ட பெயர் பலகை

கரூர்:கரூர் அருகே, சாலை விரிவாகத்தின் போது அகற்றப்பட்ட, புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த பெயர் பலகைகள் சாலையில் வீசப்பட்டுள்ளன.

கரூர் அருகே திருமாநிலையூரில், சில மாதங்களுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. தற்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படும் நிலையில், கோவை மார்க்கம் மற்றும் திருச்சி மார்க்த்தில் இருந்து வரும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வகையில், திருமாநிலையூர் ஈ.வெ.ரா., சிலை ரவுண்டானாவை சுற்றி, கரூர் மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது.
ஆனால், திருமாநிலையூர் ஈ.வெ.ரா., சிலை உள்ள, ரவுண்டானா பகுதியில், கடும் போக்கு
வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரவுண்டானாவின் அகலம் குறைக்கப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த பெயர் பலகை அகற்றப்பட்டது. அந்த பெயர் பலகைகளை, மீண்டும் பழைய இடத்தில் வைக்காமல், திருமாநிலையூர் அக்ரஹாரம் சாலையில் வீசியுள்ளனர். இதனால், கரூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்வோர், சரிவர வழி தெரியாமல் தவறி வேறு பாதையில் செல்கின்றனர். எனனே, திருமாநிலையூர் ஈ.வெ.ரா., சிலை ரவுண்டானா பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த பெயர் பலகைகளை, மீண்டும் வைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் எடுப்பது அவசியம்.

Advertisement