தொழில் கருத்தரங்கு

மதுரை: மதுரையில் மடீட்சியா சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த ‘மடிகான் எம்.எஸ்.எம்.இ., 3.0’ கருத்தரங்கு நடந்தது.

மதுரை அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு துவக்கி வைத்தார். சர்வதேச வர்த்தகம் மற்றும் வங்கியியல் நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், வடமலையான் மருத்துவமனை டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன், தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குநர் பா. ரமேஷ், மாபா நிறுவனர் கே. பாண்டியராஜன், பிராண்ட் ஆலோசகர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். மடீட்சியா தலைவர் செந்திகுமார், துணைத்தலைவர்கள் முகமது யாசிக், அரவிந்த், செயலாளர் அசோக், மாநாட்டு தலைவர் ஜெகபதிராஜன், துணைத்தலைவர்கள் நாச்சியப்பன், சத்யா மணிகண்டன், சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

Advertisement