சாய்ந்து நிற்கும் மின் கம்பங்கள்: விபத்து அச்சத்தில் மக்கள்

நரிக்குடி: நரிக்குடி அழகாபுரி பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழும், விபத்து அச்சம் உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி மற்றும் புல்வாய்க்கரை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மின் சப்ளை செய்ய பல ஆண்டுகளுக்கு முன் ரோடு ஓரங்களில் உயர் மின் அழுத்த வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் அழகாபுரி, அ. முக்குளம் அருகே உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. பலத்த காற்று, மழைக்கு சாய்ந்து விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எப்போது விழுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஏதாவது ஒரு மின் கம்பம் சாய்ந்தாலும் அடுத்தடுத்த மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் அசாதாரண சூழ்நிலை உள்ளது. மின்கம்பங்கள் சாயும் பட்சத்தில், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு, பல கிராமங்கள் இருளில் மூழ்குவதுடன், தோட்ட விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. தற்போது பருவமழை பலத்த காற்று, மழையுடன் அவ்வப்போது பெய்து வருவதால் மின்கம்பங்கள் சாயும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. விபத்திற்கு முன் அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement