அற வழிபாடு கூட்டம்

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் அற வழிபாடு கூட்டம் நடந்தது. பட்டறிவு பதிப்பக முதன்மை செயல் அலுவலர் மதன்குமார் வரவேற்றார். வானொலி நிலைய அறிவிப்பாளர் (ஓய்வு) சண்முக ஞானசம்பந்தன் 'அறன் எனப்படுவது யாதெனில்' என்ற தலைப்பில் பேசினார். இவர் விளக்கம் எழுதிய சிவ பிரகாச சுவாமிகளின் நன்னெறி விளக்க புத்தகத்தை தானம் கல்வி நிலைய திட்ட தலைவர் வெங்கடேசன் வெளியிட, கனரா வங்கி அலுவலர் (ஓய்வு) முருகப் பெருமாள் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் திருமலை நன்றி கூறினார்.

Advertisement