கரப்பான் போராட்டத்தின் பின்னணியில் ஆம் ஆத்மி; பாஜ குற்றச்சாட்டு
-நமது நிருபர்-
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சிக்காக கரப்பான் கட்சி ஒரு மறைமுகமாக இந்த போராட்டத்தை (shadow boxing) நடத்தி வருகிறது.
அந்த நாடகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது காலையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிறர் அங்கு வந்தனர். மம்தா, 'நாம் ஏன் இதில் பின்தங்க வேண்டும்?' என்று நினைத்து அவரும் அங்கு வந்து சேர்ந்தார்; அதோடு கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் இதில் இணைந்துகொண்டன. தோல்வியடைந்த, விரக்தியடைந்த இந்த நபர்கள் கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களாக டில்லி மக்களைத் துன்புறுத்தி வருகின்றனர்; மேலும் தெருப் போராட்டங்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் இந்தச் சதியை தோற்கடித்த இந்திய மக்கள் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நாட்டில் ஒன்பது முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி (SIR) மேற்கொள்ளப்பட்டுள்ளது; இது சட்டத்தின் ஒரு அங்கமாகும். இறந்துபோனவர்கள் வாக்காளர்களாகத் தொடர முடியாது. அவர்கள் தொடர வேண்டுமா என்று நாட்டு மக்களிடம் நான் அறிய விரும்புகிறேன்.
தங்கள் லோக்சபா அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் வசிக்காதவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியாது; அதேபோல, ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராகவும் இருக்க முடியாது.
இன்றைய மற்றும் கடந்த மூன்று நாட்களின் நிகழ்வுகளின் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் தெளிவாகியுள்ளன. ஒன்று, இந்திய ஜனநாயகம் குழப்பத்தையும் அராஜகத்தையும் தூண்டும் முயற்சிகளை முறியடித்துள்ளது. இரண்டு, நாட்டை பார்லிமென்ட் தான் ஆளும்; வீதிகள் அல்ல. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின: அசாம் மற்றும் நந்திகிராமில் பாஜ வெற்றி பெற்றது. புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. சில நாட்களாக டில்லியில் இந்த அராஜகச் செயல்கள் அரங்கேறிக்கொண்டிருந்தபோதே இத்தேர்தல்கள் அனைத்தும் நடைபெற்றன.
டில்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அராஜகத்தை உருவாக்கும் ஒரு இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலிலும், வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜ இத்தகைய சிறப்பான வெற்றியைப் பெற்றது என்பதை நாங்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். போராட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; ஆனால், தேர்தல் தோல்விகள் காரணமாக நீங்கள் வீதிப் போராட்டங்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளீர்கள்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது; தலைநகரான டில்லியில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தான் இது. ஜந்தர் மந்தரில் நடப்பது இந்தியாவின் நிலை கிடையாது. நல்லாட்சியின் கீழ் இந்தியா அமைதியாக முன்னேறி வருகிறது. டில்லியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால், அனைத்து சதிகளையும் முறியடித்து ஜனநாயகம் வென்றுள்ளது.
ஜனாதிபதியை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சந்தித்து பேசினார். அவர் வீதிகளில் நடத்தும் போராட்டங்களில் ஜனாதிபதியையும் இழுத்து விட முயற்சித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இவனுங்களுக்கு போராட்டம் நடத்தனம் .அதுக்கு ஏதோ ஒரு கர்ப்பானோ ,மூட்டைப்பூசியோ ,அல்லது கொசுவோ தேவை .வேறு எதுவுமில்லை இதைவைத்து தான் இவர்கள் ஆட்சிசெய்வதற்கு தகுதி உள்ளவர்களா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் .அதனால் தான் காங்கிரஸ் இதுவையில் தேய்ந்து கட்டறும்பாகி வருகின்றது .தலைமை கிறுக்கனா இருந்தால் தொண்டனும் அப்படிதான் இருப்பான் .60 வருடம் ஆண்ட கட்சி ஒரு 15 வருடம் பொறுக்கமுடியவில்லை .வேறு எதுவுமே குறைகள் வைக்கவில்லை .இப்படி ஆட்சிசெய்தால் நாங்கள் எல்லாம் எப்படி ஆட்சிக்கு வருவது? அதனால்தான் கரப்பனை கெட்டியாக பிடித்துக்கொண்டோம் .
கரப்பான்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியா, அது தான் இங்கே முதல் தவறு
தரம் தாழ்ந்த அரசியலால் மக்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ராகுல் அவர்களின் வேடம் , மம்தா அவர்களின் துரோகம், பாஜக கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், நீதிமன்றங்கள் விலைபேசப்படுவது? தனி அதிகாரம் கொண்ட அமைப்புகள் தனது நேர்மையை தவறவிட்டு ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது. விதி மீறல் அப்பட்டமாக மீறப்படுவதை பாமர மக்கள் புரிந்தும் அதை எதிர்க்க துணிவில்லாமல் ஒன்றி செல்வது போன்ற காரணிகள் தான் பெரும் கவலையளிக்கிறது. சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் தேர்தல் தேதி அறிவித்தபிறகும் திருத்தங்கள் நடைபெற்றிக்கின்றன அதில் குறிப்பிட்டு சொன்னால் இளைஞர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பெற்றோர்கள் பெயர் நீக்கப்பபட்டுள்ளது காரணம் 2005சிறப்பு சீர்திருத்த முறையில் அவர்கள் பெயர் இல்லை. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஓட்டுக்களை குறிவைத்து தாக்கப்பட்ட தாக்குதலாகவே கருத முடியும். ஆகவே தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் அவசியமாகிறது. evm பதிலாக பழைய ஒட்டு முறையை கொண்டு வரவேண்டும்.
மோசமான அரசியல் சூழல். தேசவிரோத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அரசு. பெயரை பாரு ... கரப்பான்கள்... கொடுமை.
சாராய வியாபாரி கெஜ்ரிவால் தான் கரப்பாண்பூச்சி