கடலுார் சிறையில் கஞ்சா 2 கைதிகள் மீது வழக்கு

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கஞ்சா பயன்படுத்திய 2 கைதிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில், சிறப்பு சோதனை குழு காவலர்கள், கைதிகள் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 6ம் எண் தொகுதியில் உள்ள நெய்வேலி, வட்டம் 21ஐச் சேர்ந்த விசாரணை கைதி சுதாகரன்,29; என்பவரை சோதனை செய்த போது, உள்ளாடையில் 5 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், வடக்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த விசாரணை கைதி சீயான் பாண்டியனிடம்,40; கஞ்சா வாங்கியது தெரிந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் விஷாந்த் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார், சுதாகரன், சீயான் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement