குறைக்கப்பட்ட கமிஷனை வழங்கக்கோரி எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி; குறைக்கப்பட்ட கமிஷனை வழங்கக்கோரி, தர்-மபுரி எல்.ஐ.சி., அலுவலகம் முன், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. கிளை தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் சிவ-மணி, கிளை செயலாளர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் போத்தன், வீரப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சூப்பர் சேல்ஸ் சாத்தி அணுகுதலை எளிமை-யாக்க வேண்டும். பிரிமியம் பாயிண்டுகளில் ஏற்-கனவே இருந்த சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும். எல்.ஐ.சி., முகவர்களின் குறைக்கப்-பட்ட முதலாண்டு கமிஷனை, மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்து-வக்காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்.எல்.ஐ.சி., முகவர்களுக்கு நலநிதி மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டத்தை தொடங்க வேண்டும். ரசீதில் முழுமையான தகவல்கள் முன் இருந்தது போல் வழங்க வேண்டும். முக-வர்களின் குழு காப்பீட்டு வயது வரம்பை நீக்கி, முகவர்கள் பணியிலுள்ள வரை காப்பீடு வழங்க வேண்டும். எல்.ஐ.சி., பங்குகனை விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷங்கள் எழுப்பினர்.
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்