மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கரூர்:மத்திய
அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமரின்
கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர்,
பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2026--27-ம் கல்வியாண்டில்,
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த
செயல்பாடு கொண்ட கல்வி நிறுவனங்களில் (100 சதவீத தேர்ச்சி) 9-ம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவியருக்கு 30 சதவீதம்
விண்ணப்பங்களை
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.in மூலம்
சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக 9,
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம், 75 ஆயிரம்
ரூபாய், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய்
வழங்கப்படும். இத்திட்டத்தில் மாணவியருக்கு, 30 சதவீதம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை
சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு
மிகாமலும் இருக்க வேண்டும்.
31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
கடந்த
கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை
தளத்தில் விபரங்களை உறுதி செய்து புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தல்
விண்ணப்பத்தை இம்மாதம், 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி
தலைமை ஆசிரியர்கள், நவ., 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க
வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கடைசி தேதி,
தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!