இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-நமது சிறப்பு நிருபர்-
புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தர்ப்பணம் செய்வது நம் கடமை. பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்தால் மட்டும் புத்திரனாகி விட முடியாது. பின்வரும் மூன்று கடமைகளைச் செய்பவரே இந்த தகுதியை பெறுகிறார்.
* பெற்றோரை கவுரவமாக நடத்துதல்.
* மறைந்த பின் பிதுர்கடன் செய்தல்.
* ஒருமுறையாவது முன்னோருக்கு விஷ்ணுகயாவில் (உத்தரகண்ட்) சிராத்தம் கொடுத்தல்.
மகாளய அமாவாசையில் சிராத்தம் கொடுத்தால் நம் வம்சம் மட்டுமின்றி மகள் (திருமணத்திற்குப் பின்), மருமகள், சகோதரி, மாமா, அத்தை ஆகியோரின் வம்சங்களும் நற்கதி பெறுவர். ஒருவர் செய்யும் சிராத்தத்தால் மேற்சொன்ன அனைவரும் பலன் பெறுவர் என்கிறது கருடபுராணம். தன் குடும்பத்தினரை வாழ்த்த திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் முன்னோர்கள் எழுந்தருள்வர். அவர்களின் ஆசி பெறவே திருமணத்தில் 'நாந்தி சிராத்தம்' (முன்னோர் வழிபாடு) செய்கிறோம்.
திருமண நிகழ்ச்சியில் பாலிகை இடுதல், வாழை மரம், மாவிலை தோரணம் கட்டுவதும் பிதுர் ஆசியைப் பெறுவதற்காகவே. ஹோமம், உணவு அளித்தல், பிண்டம் கொடுத்தல் ஆகிய மூன்றும் சிராத்தத்திற்கு அடிப்படையானவை. நம் உறவினர் யாராவது சிராத்தம் செய்யாவிட்டாலும் அது நம்மையும் பாதிக்கும். அதிலிருந்து விடுபட மகாளய அமாவாசை அன்று சிராத்தம் செய்யுங்கள். மகாளய அமாவாசையில் மட்டுமே முன்னோர் மட்டுமின்றி காருண்ய பித்ருக்களுக்கும் பிண்டம் தரலாம்.
காருண்ய பித்ரு என்பது நமக்கு உதவி செய்த யாராகவும் இருக்கலாம். உதாரணமாக நம் தாயாரின் பிரசவம் பார்த்த நர்ஸ், டாக்டர், வேலையாள், ஆசிரியர், சிறு வயதில் இறந்த நம் குடும்பத்தினர், கருவிலேயே மரணித்தவர், துர்மரணம் அடைந்தவர், உற்றார் உறவினர்.
இவர்களும் நமக்கு திருப்தியாக ஆசியளிப்பார்கள். மகாளய அமாவாசை அன்று விரதமிருந்து தர்ப்பணம், சிராத்தம் செய்தால் காசி (உத்தரபிரதேசம்), விஷ்ணுகயாவுக்கு (உத்தரகண்ட்) சென்று வந்த புண்ணியத்தை தரும். மகாளய அமாவாசை அன்று சிராத்தம் செய்தால் மனநிறைவுடன் வாழலாம்.
அதே நேரம் ஜோசியர், புரோகிதர் பேச்சைக் கேட்டு அழுக்கு துணிகளை ஆற்றில் உட் டா முன்னோர்கள் இன்னும் கஷ்டப்படுவார்கள்.சுத்தமா இருங்க. சுற்றுப்புறத்தை சுத்தமா வையுங்கள்.மேலும்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்