இளம்பெண் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

பென்னாகரம்;பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணை, அன்னசாகரம் ஏ.கொல்லஅள்ளியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தினேஷ்கார்த்திக், 21, என்பவர், சில மாதங்க-ளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அப்பெண் கர்ப்பமான நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக்-கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இளம்-பெண்ணுக்கு, 18 வயது முடியாததால், பென்னா-கரம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரி-வித்தனர். அதன்படி போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு இளம்வயது திரு-மணம் செய்த கட்டட மேஸ்திரி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement