டிரீம் ஒலிம்பிக் திட்டம்: மாதம் ரூ.1 லட்சம் அறிவித்தார் முதல்வர் விஜய்
சென்னை: ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், 'டிரீம் ஒலிம்பிக்' திட்டத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
ஆசிய விளையாட்டு மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையருக்கு, முதல்வர் விருந்து மற்றும் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது.
மாதம் ரூ.1 லட்சம்
இதில் முதல்வர் விஜய் பங்கேற்று, வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களுக்கு, 'டிரீம் ஒலிம்பிக்' திட் டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வீரர்களுக்கு உதவித்தொகையாக, மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்த உதவித்தொகை உட்பட, ஒரு வீரருக்கு ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில், பதக் கம் வென்ற, 13 வீரர் - வீராங் கனையருக்கு 7.65 கோடி ரூபாய், 40வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற ஐந்து வீரர் - வீராங்கனையருக்கு, 60 லட்சம் ரூபாய்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 2 வீராங்கனையருக்கு 14 லட்சம் ரூபாயும், தேசிய சப் - ஜூனியர் மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு 18 லட்சம் ரூபாய் என, 8.57 கோடி ரூபாய்க்கான ஊக்கத்தொகைகளையும் முதல்வர் வழங்கினார்.
@block_B@
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தமிழகத்தில், 1994ம் ஆண்டுக்கு பின், அதாவது மறைந்த ஜெயலலிதா அமைத்த நேரு விளையாட்டு அரங்கம், டென்னிஸ் மைதானம், நீச்சல் அரங்கத்துக்கு பின், உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, தங்களை தயார்படுத்த, உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். எனவே, முதல்வர் விஜய், விளையாட்டுக்காக எவ்வளவு முதலீடுகள் வேண்டும் என்றாலும் செய்ய அறிவுறுத்தி உள்ளார். போதை பயன்பாட்டை ஒழிக்க, விளையாட்டு தான் ஒரே மருந்து.
அதனால், பள்ளி, கல்லுாரிகளில் விளையாட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும். பள்ளிகளில் தினமும், 45 நிமிடம் உடற்கல்வி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, கல்லுாரிகளிலும், 45 நிமிடம் உடற்கல்வி வகுப்புகளை கட்டாயமாக்க, முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், திருநங்கையருக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.block_B
விளையாட்டு வீரர்களுக்காக ஹைடெக் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளும் மருத்துவ உதவிகளும் சிறந்த பயிற்சியாளர்களை நியமனம் செய்வதற்கும் அரசு செலவு செய்யும் போது அது வரவேற்கத்தக்க திட்டமாக இருக்கும் ஆனால் தனிப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இவ்வாறு பணத்தை அள்ளி இறைப்பது ஊதாரித்தனம் இந்த கூத்தாடிக்கு பணத்தின் அருமை எவ்வாறு தெரியும் கூத்தாடி உழைத்து சம்பாதித்த பணம் இல்லையே வியர்வையின் வாசனை கூட தெரியாதவர்கள்
பாரு, பாரு, நல்ல பாரு, எங்க அண்ணன் விஜய் தல்ப்பதீ அவர்களின் கதர் கோட், கதர் சட்டை, கதர் பேண்டு, கதர் பெல்ட்....
கடைத்தேங்காய்கள் வழிப்பிள்ளையார்களுக்காக உடைக்கப்படுகின்றன.மேலும்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!