தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு
- நமது சிறப்பு நிருபர் -
2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த பரிசை தமிழ் வம்சாவளியை சேர்ந்தவரும், தென் ஆப்ரிக்கா நாட்டவருமான நவநீதம் பிள்ளை பெற உள்ளார். சர்வதேச சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்ட மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்
டர்பனில், நாராயணசாமி மற்றும் சாந்தம்மா ஆகியோருக்கு 1941ம் ஆண்டு மகளாக பிறந்தார். இவரின் தாத்தா பாட்டி, 1890 களில் தென் ஆப்ரிக்காவில் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். நவநீதம் பிள்ளை 1963 ல் நேடால் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார்.1965 ல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார்.
பிறகு வழக்கறிஞராக பணியை துவக்கினார். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1988ல் ஹார்வர்ட் சட்டப்பல்கலையில் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.1973 ல் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த போது அவருக்கு உதவி செய்தவர்.
85 வயதாகும் இவர், தென் ஆப்ரிக்கா உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர் அல்லாத பெண் நீதிபதியாக பணி ஆற்றி உள்ளார். 2008 முதல் 2014 வரை ஐநாவின் மனித உரிமைகள் தலைவர் , சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
மேலும்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தலில் பாஜ அமோகம்; ஒரு லட்சம் ஓட்டில் பாஜ வேட்பாளர் முன்னிலை
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு