வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி

சென்னை : இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி: முதல்வர் விஜயின் நான்கு மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி. மாற்றம் வேண்டி மக்கள் ஓட்டு போட்டனர். மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாற்றத்துக்கான அரசாகவும், நல்லாட்சியாகவும் தொடரும்.

இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் சேர்ந்த போட்டியிட்டன. ஒரு பக்கம் இபிஎஸ், ஸ்டாலினை புகழ்ந்தார். ஸ்டாலின், இபிஎஸ் -ஐ புகழ்ந்தார். கூட்டாக தேர்தலை சந்தித்தனர். இருவரும் தமிழகத்தின் விரோதி என மக்கள் புரிந்து கொண்டனர். வரும் தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் அரசியல் இதுதான்.

இபிஎஸ் 9 ஆண்டுகள் அதிமுகவை வழிநடத்தி 3வது இடத்துக்கு கொண்டு சென்றார். சுயநலத்துக்காகவும், சொத்துக்காகவும், மகனை காப்பாற்றவுமே கட்சியை நடத்துகிறார். தனது சொத்தை காப்பாற்ற, ஸ்டாலின், உதயநிதியை ஆட்சியில் அமர வைக்க பாடுபடுகிறார். இவரை நம்பி யார் போவார்கள். அதிமுகவை லெட்டர் பேட் கட்சியாக மாற்றியுள்ளார் இபிஎஸ்.

இன்று இரட்டை இலைக்கு வழுந்த ஓட்டு. இபிஸ விழுந்த ஓட்டு இல்லை. அதிமுக ஓட்டுகளை சரித்து, அனைவரையும் வெளியேற்றியது தான் இபிஎஸ் சாதனை. இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பின்பற்றி பல நூறு கோடி செலவு செய்தனர்.

இபிஎஸ் உடன் பயணிக்க முடியாமல், இருவரும் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது. அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார். அதனை முதல்வர் அறிவிப்பார். நீதிமன்ற தேர்தல் தடை நீங்கியதும் இடைத்தேர்தல் நடக்கும். எப்போது நடந்தாலும் விஜய்க்கு ஓட்டுப்போட மக்கள் தயாராக இருக்கின்றனர். மாற்றம் வேண்டும். யாராலும் மாற்றம் கொடுக்க முடியாது. இபிஎஸ் 4வது இடத்திற்கு சென்று விட்டார். திமுகவில் தலைவர்கள் இல்லை. விஜய் உடன் இணைந்து நூறு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், '' சிறந்த ஆட்சி நடக்கிறது என்று மக்கள் ஓட்டு வாயிலாக நிரூபித்துள்ளனர். தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் தவெக தான் வெற்றி பெறும். அதற்கு முத்தாய்ப்பாக இந்த இரண்டு தேர்தல் அமைந்துள்ளது. தாராபுரம், மதுராந்தகத்தில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. விஜயை அனைவரும் பாராட்டுகின்றனர். பாராட்டுகின்றனர். இடைத்தேர்தலில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிடுவதற்கு இனிமேல் யோசிப்பார்கள். விஜயை பின்னால் நாடு இருக்கிறது. அவரை மக்கள் நம்புகின்றனர்,'' என்றார்.

Advertisement