இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 09) கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (அக் 09) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இன்று (அக் 09)
கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (அக் 09) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (அக் 10)
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு
-
மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தலில் பாஜ அமோகம்; ஒரு லட்சம் ஓட்டில் பாஜ வேட்பாளர் முன்னிலை