நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்; வழக்குப் பதிந்தது கோவா போலீஸ்

2

பணஜி: ஹிந்தி நடிகர் நானா படேகர், 75, மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறியுள்ள கோவா போலீஸ், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் நானா படேகர். இவர், நேற்று (அக்., 08) காலை கோவாவில் உள்ள தன் வீட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது நண்பர் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

பின், மருத்துவமனையில் நானா படேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்ததால், அவருக்கு 45 நிமிடங்களுக்கு, இதய துடிப்பை மீண்டும் இயங்க வைப்பதற்கான, சி.பி.ஆர்., சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலனளிக்காத நிலையில், காலை 5:20 மணிக்கு நானா படேகர் உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

சுயநினைவின்றி மருத்துவமனைக்கு நானா படேகர் கொண்டு செல்லப்பட்டதால், அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என கோவா போலீஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பிரிவு 194ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது

Advertisement