த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
சென்னை: இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றதால், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது குறித்து, வரும் 12ல், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதுாரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
தாராபுரம் தொகுதியில் இ.கம்யூ., கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மா.கம்யூ., கட்சியும் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளன. இரு தொகுதிகளிலும், த.வெ.க., வெற்றி பெற்றதால், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. தனித்து போட்டியிட்டு, 'டிபாசிட்' இழந்துள்ளதால், த.வெ.க., கூட்டணியில் இணைவது குறித்து, அக்கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் வரும் 12ம் தேதி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், த.வெ.க., கூட்டணியில் இடம்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும்
-
இணைய உலகை கைப்பற்ற அமெரிக்க சதி? எலான் மஸ்க் குற்றச்சாட்டின் கொடூர பின்னணி
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்