அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
சென்னை : கோவை பெரியதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் 'ரோப்' கார் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட்டுவிட்டது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பெரிய தடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல வசதியாக, 13 கோடி ரூபாய் மதிப்பில், 420 மீட்டர் உயரத்தில் 'ரோப்' கார் அமைக்கும் திட்டம், 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அனுவாவி பகுதி, யானைகள் வழித்தடம் என்பதால், ரோப் கார் திட்டத்தை செயல்படுத்தினால், சூழலியல் பாதிப்பும், யானைகள் நடமாட்டம் தடைப்பட்டு, ஊருக்குள் நுழையக்கூடும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
இந்த திட்டத்தை நிறுத்த உத்தரவிட கோரியும், யானைகள் வழித்தடமான மருதமலையில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்தும், சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி.கே.முத்துகுமார் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் ஆர்.பரணிதரன் ஆஜராகி," பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அப்பால், சிலையை நிறுவுவதற்கான மாற்று இடம் கண்டறிந்து தெரியப்படுத்த, கால அவகாசம் வழங்க வேண்டும்.
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் ரோப் கார் அமைக்கும் திட்டத்தை, அரசு கைவிட்டுவிட்டது" என்றனர்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை, எட்டு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.மேலும், வடவள்ளி முதல் மருதமலை அடிவாரம் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம்; அதேநேரம் மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது : ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்