தினமலர் செய்தி எதிரொலி… பழுதான மின் விளக்குகள் சீரமைப்பு

விழுப்புரம்: தினமலர் செய்தி எதிரொலியாக விழுப்புரம் பெருந்திட்ட வளாக சாலை சென்டர் மீடியனில் பழுதாகிய மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இருந்து அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையின் சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பெருந்திட்ட நுழைவு வாயிலில் இருந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை சென்டர் மீடியனில் உள்ள மின் விளக்குகள் சில தினங்களாக எரியாமல் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழுதான மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு, பிரகாசிக்கிறது.

Advertisement