‘பல இளம் பேச்சாளர்களை பேச வைத்து ஊக்கப்படுத்தியவர் சாலமன் பாப்பையா’
கோவை: சமீபத்தில் மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு ‘நினைவலைகள்’ நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.
இதில், ‘பேராசிரியர் சாலமன் பாப்பையா ஒரு பெருந்தமிழர்’ என்ற தலைப்பில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா, ஹரி கோபாலன், மீரா நாகராஜன் ஆகியோர் சாலமன் பாப்பையாவின் பேச்சாற்றல் மற்றும் இலக்கிய ஆளுமை குறித்து கருத்துரை வழங்கினர்.
சாலமன் பாப்பையாவுடன் நீண்ட காலம் அனுபவங்களை பெற்ற பாரதி பாஸ்கர், ராஜா இருவரும் அவரது பிரிவை தாங்க முடியாமல் அழுதபடியே பேசினர்.
அவர், ‘‘நான் அவரை தந்தையாகத்தான் பார்த்து இருக்கிறேன். அவரது அன்பும் அரவணைப்பும்தான் என்னை பட்டிமன்ற மேடைகளில் நம்பிக்கையுடன் வலம் வரச்செய்தது. பல இளம் பேச்சாளர்களை பேச வைத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். அவருடன் பயணித்த இனிமையான காலத்தை மறக்க முடியாது,’’ என்றார்.
எப்போதும் கலகலப்பாக பேசத்துவங்கும் ராஜா, நேற்று குரல் தழுதழுக்க பேசினார். ‘‘நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே சிந்திப்பார். நல்ல வழிகளை மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவார். என்னையும், பாரதி பாஸ்கரையும் பேச வைத்து அழகு பார்த்தவர். எங்களின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்து பூரித்து போனவர் அவர்தான். அவரிடம் கற்க வேண்டிய பல விஷயங்களை கற்கவில்லையோ என்ற மனக்குறை இருக்கிறது,’’ என்றார்.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்