ஆழம் இல்லாத அகழியால் பயனில்லை! தமிழ்நாடு விவசாய சங்கம் புகார்
ஆனைமலை: பொள்ளாச்சி அருகே, புளியங்கண்டியில்அகழிகள் போதிய ஆழமின்றி தோண்டப்படுகிறது. இதனால், எவ்வித பயனும் இல்லை, என, தமிழ்நாடு விவசாய சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட செமணாம்பதி, புளியங்கண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், வனத்தையொட்டி அமைந்துள்ளன. இப்பகுதியில், தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து, உணவுக்காகவும், தண்ணீருக்காக வெளியேறும் யானை கூட்டம், விளை நிலங்களுக்குள் புகுந்து, சாகுபடி செய்யப்பட்ட தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
விளைநிலங்களுக்குள் யானைகள் புகாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதில், புளியங்கண்டி நரிக்கல் முடக்கு பகுதியில் அகழி தோண்டப்பட்டது. இந்த அகழி ஆழமின்றி உள்ளதால் எவ்வித பயனும் இல்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
அங்கலகுறிச்சி அருகே, புளியங்கண்டி நரிக்கல் முடக்கு பகுதியில் யானைகள் விளைநிலங்களுக்குள் அவ்வப்போது புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. சில நாட்களுக்கு முன், தோப்புக்குள் புகுந்த யானைகள், தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், கம்பி வேலி அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இங்கு, இரண்டு கி.மீ.,க்கு, ஆறு அடி ஆழத்தில் அகழி வெட்டி தருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வெட்டப்பட்ட அகழி போதுமான ஆழமின்றி உள்ளன. ஒரு சில இடங்களில், இரண்டு அடி, ஒரு சில இடங்களில், ஐந்தடி என தோண்டப்பட்டுள்ளன. பாறைகள் அதிகமாக உள்ளதால் ஆழப்படுத்த முடியவில்லை என, வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தோண்டப்பட்டுள்ள அகழி, வனவிலங்குகள் வந்து செல்வதற்கு ஏதுவாகத்தான் உள்ளன. மழை காலங்களில் மண் சரிந்து இந்த அகழியை மூடிவிட அதிக வாய்ப்புள்ளது. எனவே, அகழிக்கு மாற்றாக, வனத்துறை சார்பில் கம்பி வேலி அமைத்து தந்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்