பிரதமர் அம்பானி அவர்களே: எலான் மஸ்க் வெளியிட்ட திமிர் பதிவுக்கு குவியும் கண்டனம்
வாஷிங்டன்: இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான் என விவரித்து, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள திமிர் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையான 'ஸ்டார்லிங்க்' சேவையை கொண்டு வர எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. சில பணக்காரர்கள் தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் துவங்குவதை முடக்குவதாக, சில தினங்களுக்கு முன் எலான் மஸ்க் பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அம்பானி தான் அவர் என குறிப்பிடும் வகையில், தற்போது எலான் மஸ்க் சமூக வலைதளங்களில், 'பிரதமர் அம்பானி அவர்களே! என குறிப்பிட்டு திமிர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களுக்கு, நீங்கள்தான் இந்தியாவின் நிஜமான முதலாளி என்பதை உணராமல் போனதற்கு என் பணிவான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்திய மக்கள் மத்தியில் உங்களது ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவே நீங்கள் விரும்புவீர்கள் என்பது புரிகிறது. இருப்பினும், எங்களது ஸ்டார்லிங்க்குடன் போட்டியிட நீங்கள் அனுமதிப்பீர்களா.
இந்தியாவில் இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புறங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறு வணிகர்கள் உலக சந்தையை அணுக முடிவதில்லை. ஸ்டார்லிங்க் சேவை வந்தால் அவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் மேம்படும். நன்றி. இவ்வாறு கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.
வாசகர் கருத்து (38)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10 அக்,2026 - 21:31 Report Abuse
பதிலுக்கு இந்தியர்கள் மஸ்க்கை பார்த்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூஜா அவர்களே என்று அழைப்போம். அல்லது ட்ரம்பின் எடுபிடி அவர்களே என்றும் அழைக்கலாம். 0
0
Reply
சங்கி - ,
10 அக்,2026 - 19:47 Report Abuse
டிரம்ப்பின் நண்பனான நீ அவரை மாதிரி பைத்தியமாகிவிட்டாயா? உன்னை மாதிரி ஆளையெல்லாம் ஜெசிபி இயந்திரம் மூலம் அழிக்கவேண்டும். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
10 அக்,2026 - 14:59 Report Abuse
தம்பி மஸ்க்கு - நீ அனுமதி வாங்கவேண்டியது இந்திய அரசிடம் - அவர்கள் தரவில்லை என்றால் நீ உன் அடிமை ட்ரம்பிடம் போயி கதறி அழு - அதை விட்டுவிட்டு எங்கள் நாட்டு தொழிலதிபரிடம் மோதிபார்ப்பது சரியல்ல 0
0
Reply
சூரியா - ,
10 அக்,2026 - 14:24 Report Abuse
உலகின் நம்பர் 1 பணக்காரர், அதிலும் பிரபல தொழில்கள் பலவற்றின் முதலாளி, தன் தகுதிக்கு சற்றும் பொறுத்தமில்லாமல், பொறுப்பற்றுப் பேசி உள்ளார். குலத்தளவே ஆகுமாம் குணம் என்பதை நிரூபித்துவிட்டார். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
10 அக்,2026 - 12:29 Report Abuse
மாஸ்க் உன்னுடைய இந்திய பிரநிதியாக பப்புவை நியமிச்சா ரொம்ப சரியா இருக்கும்? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
10 அக்,2026 - 12:23 Report Abuse
ட்ரம்பின் கைத்தடி எலன் மாஸ்க்கை இந்தியவுக்குள் விட்டா உள்நாட்டு குழப்பம் செய்து விடுவான்? 0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
10 அக்,2026 - 10:47 Report Abuse
அப்பாவி மச்சான் என்பது ஆட்சேபகரமான பொது அமைதிக்கு பங்கம் விளைவிகாகும் வார்த்தையா ??? 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
10 அக்,2026 - 10:13 Report Abuse
திஹாரில் களி தின்ன வையுங்க. திமிர் பிடித்தவர் 0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
10 அக்,2026 - 10:10 Report Abuse
ஆடு நனையுதேன்னு இவர் அழுகுது தான் கதை 0
0
Reply
kamal - ,
10 அக்,2026 - 09:38 Report Abuse
அமெரிக்காவின் சிறு குறு வியாபாரி எல்லான் மாஸ்க் அவர்களே, உங்கள் ஸ்டார்லிங் இணையமானது எதற்கும் உதவாது 0
0
Reply
மேலும் 28 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல் தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Advertisement
Advertisement