குன்றத்து மலையில் வேலுக்கு அபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை மேல் வேல் எடுக்கும் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் வேல் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறையின் அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து மாலை 6:45 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் தங்கவேலை சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் மலையில் சமைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வேலுக்கு அபிஷேகம் முடிந்தவுடன் மழை பெய்தது.

இரவு 8:00 மணிக்கு வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.

பின் பூ பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.

Advertisement