நிலக்கடலை விலை உயர்வு: கூலி தொழிலாளர்கள் ஏமாற்றம்
திருப்புவனம்: தமிழகத்தில் நிலக்கடலை விலை உயர்ந்ததால் கூலி தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் மாலை நேரங்களில் தள்ளு வண்டிகளில் அவித்த நிலக்கடலை விற்பனை செய்வார்கள். கூலி தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் என பலரும் நிலக்கடலை வாங்குவது வழக்கம்.
கடந்த இரு மாதங்களாக நிலக்கடலை விளைச்சல் இல்லாதாலும், விலை உயர்ந்ததாலும் அவித்த நிலக்கடலை கிடைக்காமல் கூலி தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை அறுவடை வழக்கமாக செப்டம்பரில் நடைபெறும்.
இந்த மாதங்களில் நிலக்கடலை விலை வெகுவாக குறையும். தமிழகத்தில் நாட்டு நிலக்கடலை, ஆந்திர நிலக்கடலை என இருவகை நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
நாட்டு நிலக்கடலை எண்ணெய் சத்து மிக்கது என்பதால் கடலை எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்படுத்துவார்கள்.
ஆந்திரா மற்றும் கம்பெனி நிலக்கடலையை அவித்து மாலை நேரங்களில் ரோட்டோரங்களில் தள்ளு வண்டிகளில் வைத்து விற்பனை செய்வார்கள். கூலி தொழிலாளர்கள் பலரும் வாங்கி சாப்பிடுவார்கள்.
நிலக்கடலை விலை கடந்த சில மாதங்களாக கிடு கிடுவென உயர்ந்து விட்டது. கடந்த ஜூலை வரை ஒரு கிலோ நிலக்கடலை 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 175 ரூபாயாக உயர்ந்து விட்டது, விலை உயர்ந்ததும் நிலக்கடலை கிடைக்கவே இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், கூலி தொழிலாளர்கள் விரும்பி சாப்பிடும் கம்பெனி நிலக்கடலை திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிக அளவு பயிரிடப்படுகிறது. மதுரை மாவட்டத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து தான் நிலக்கடலை வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலக்கடலை விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் போதிய விளைச்சல் இல்லாததால் வரத்தும் இல்லை. இதனால் நகரின் பல இடங்களில் அவித்த நிலக்கடலை கிடைப்பதே இல்லை.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்