சுருளி அருவி பூத நாராயணர் கோயில் திருப்பணிகள் துவங்குவதில் இழுபறி
கம்பம்: சுருளி அருவியில் பழமையான பூதநாராயணர் கோயில் பாலாலயம் நடந்து இரண்டு ஆண்டுகளை கடந்தும் திருப்பணிகள் துவங்காமல் உள்ளது. இதனால் கும்பாபிஷேகம் தாமதமாகி வருகிறது.
சுருளி அருவியில் உள்ள பூதநாராயணர் கோயிலில் ஒரே கருவறையில் சிவனும், பெருமாளும் , எழுந்தருளியுள்ளனர்.
பூத நாராயணராக பெருமாளும், அத்தி வரதராக சிவனும் எழுந்தருளியுள்ள தலமாகும்.
தேவர்களை அரக்கர்கள் அழிக்க முற்பட்ட போது, தேவர்களை சுருளிமலையில் மறைத்து வைத்து, அவர்களுக்கு பூதமாக நின்று காவல் காத்தார் என்பதால் பூதநாராயணராக இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார் என கூறப்படுகிறது.
இங்கு மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்போர் அவர்கள் ஆன்மா சாந்தி பெற, இக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பாகும்.
இக் கோயிலில் கும்பாபிஷேகம் 2004 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
ஆனால் 20 ஆண்டுகளை கடந்ததால், 2024 ஜூனில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய பரம்பரை அறங்காவலர்களும், ஹிந்து சமய அறநிலைய துறையும் முடிவு செய்து பாலாலயம் செய்தனர்.
ஆனால் பாலாலயம் முடிந்த பின் திருப்பணிகள் செய்ய அதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. ஹிந்து அறநிலைய துறை ஆண்டிற்கு ஒரு முறை உண்டியலை மட்டும் எடுத்து செல்கின்றனர்.
ஆனால் கோயில் திருப்பணிகளில் மேற்கொள்ள ஆர்வம் காட்ட வில்லை.
பெரிய அளவில் பட்ஜெட் தேவையில்லை. உபயதாரர்களை அழைத்து ஆலோசித்தாலே திருப் பணிகள் துவங்கி விடும். அதற்கான முயற்சிகளை ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்