சத சண்டி மகா ஹோமம்
புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை துவங்குகிறது.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி தினமும் காலை 7:00 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, அபி ேஷக ஆராதனை, நவாவரண பூஜை, கன்யா, வடுக, தம்பதி, சுவாசினி பூஜைகள், வேதிகார்ச்சனை, சப்தசமி பாராயணம், சப்தசமி ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை 5:00 மணி முதல் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விக்னேஸ்வர பூஜை, வேதிகாரச்சனை, மூலமந்திர ேஹாமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
19ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகா பைரவி பலி, மகா யோகினி பலி தொடர்ந்து தீபாராதனையும், 20ம் தேதி காலை 7:00 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, அபிேஷக ஆராதனை, நவாவரண பூஜை, கன்யா, வடுக, தம்பதி, சுவாசினி பூஜைகள், சப்த சதி பாராயணம் ஹோமம், விசேஷ 108 திரவ்யாஹூதி, மகா பூர்ணா ஹூதி, அபி ேஷகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
போரை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வராது; ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் முடிவுக்கு உக்ரைன் எதிர்ப்பு
-
பயிற்சியாளருடன் மோதல் விவகாரம்; ரொனால்டோவுக்கு 6 மாதம் தடை விதிக்க வாய்ப்பு
-
அதிகார அமைப்பின் மீது ராகுலுக்கு மரியாதை இல்லை; வெட்கக்கேடான விஷயம் என மத்திய அமைச்சர் காட்டம்
-
கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து வெளியேற்றிய போலீசார்
-
நண்பரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வாலிபருக்கு வலை
-
மரத்திலிருந்து விழுந்த ரயில்வே ஊழியர் சாவு