போரை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வராது; ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் முடிவுக்கு உக்ரைன் எதிர்ப்பு

1

வாஷிங்டன்: போரை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வராது என ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்படும்' என, எச்சரித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது தன் நாட்டின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, ரஷ்யா மீதான டீசல் ஏற்றுமதி தடைகளை வரும் 2027, ஏப்ரல் வரை, நீக்குவதாக அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, 'ரஷ்ய அதிபர் புடினுக்கு அளிக்கும் இந்த பரிசு, உக்ரைனுக்கு எதிரான போரை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வராது. நாகரிக உலகத்திற்கும் இதனால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை' என, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு, அந்நாட்டின் எம்.பி.,க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆளும் குடியரசு கட்சி எம்.பி., டான் பேகான் கூறுகையில், ''உக்ரைனுக்கு 70 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவாக இருக்கின்றனர்.

இந்தச் சூழலில், ரஷ்ய அதிபரின் போர் பொருளாதாரத்திற்கு உதவம் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த இம்முடிவு தார்மீக ரீதியாக தவறானது,'' என விமர்சித்துள்ளார்.

Advertisement