நண்பரிடம் ரூ.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வாலிபருக்கு வலை

புதுச்சேரி: திருக்கனுாரில் தொழிற்சாலை துவங்குவதாக கூறி, ஐ.டி. ஊழியரிடம் 75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கனுார், வணிகர் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன், 29; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் சோரப்பட்டு திலீப், 32. திலீப் தொழிற்சாலை தொடங்குவதற்காக பிரபாகரனிடம் கடனுதவி கேட்டுள்ளார்.

அவரும் கடந்த 2024ம் ஆண்டு டிச., 17ம் தேதி தனியார் வங்கியிலிருந்து ரூ. 75 லட்சம் கடனுதவி பெற்று, திலீப் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தினார். பணத்தை 6 மாதங்களில் திரும்பி கொடுத்து விடுவதாக திலீப் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், அவர் பணத்தை தரமால் அலைக்கழித்து வந்தார். பல முறை கேட்டும் இதுவரை அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, திலீப்பை தேடி வருகின்றனர்.

Advertisement